follow the truth

follow the truth

March, 22, 2025
HomeTOP1இன்று முதல் மறு அறிவித்தல் வரை யால தேசிய பூங்காவிற்கு பூட்டு

இன்று முதல் மறு அறிவித்தல் வரை யால தேசிய பூங்காவிற்கு பூட்டு

Published on

யால தேசிய பூங்கா இன்று (01) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்றும், பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்து சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று முதல் மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, யால வலய இலக்கம் 01 -ஐ சேர்ந்த கடகமுவ மற்றும் பலடுபான நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மற்றுமொரு சந்தேகநபர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்த...

மாத்தறை துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்றிரவு (21)...

பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் எனக்கு வேண்டாம்

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...