கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாண கோலத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருவரை இன்று (03) காலை கடுகண்ணாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.