குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்களை தயாரித்து களனி பிரதேசத்தில் காணியொன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா பத்தரமுல்லையில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.