மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் வைத்து மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால்கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய சந்தேக நபர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
கடந்த 18 ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் “கஜ்ஜா” என்ற அருண விதானகமகேவும் அவரது இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
அதன்படி, இந்தக் குற்றம் தொடர்பாக இதுவரை 11 சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.