சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 13,000 சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கண்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் முன்னெடுத்து வருகிறது.