உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து விவாதிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், துணை மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் முன் அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று(09) நடைபெற்ற கலந்துரையாடலின் போது, வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் செயல்முறை குறித்து நீண்ட விவாதம் நடந்ததாக தேசிய தேர்தல்கள் ஆணையத்தின் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
168 உள்ளூராட்சி அமைப்புகளின் சார்பாக 57 சுயாதீன குழுக்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளதோடு, 18 அரசியல் கட்சிகளும் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளன.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.