follow the truth

follow the truth

April, 30, 2025
HomeUncategorizedவேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

Published on

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை 8 மணி முதல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதிகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (14) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் நிறைவடையும் என்றும், வேட்புமனு தாக்கலின் பின்னர் எந்தவொரு அணிவகுப்பு, வாகனப் பேரணி அல்லது ஒன்றுகூடல் நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...

முதல் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப்...