follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉலகம்துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

Published on

இரண்டு நாள் பயணமாக, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்க்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

துபாய் பட்டத்து இளவரசர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டாண்மையை முன்னேற்றுவதில் துபாய் முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பு ஆழமாக வேரூன்றியது. துபாய் பட்டத்து இளவரசர் வருகை எதிர்காலத்தில் இன்னும் உறவுகளை வலுப்படுத்த வழிவகுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உக்ரைன் இராணுவத்தைக் குறிவைத்த ரஷ்யா – ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம்...

அதிகரிக்கும் பேரழிவு அபாயம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று(30) காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள...

சுனாமி அலைகள் ஜப்பானில் தாக்கம் 9 இலட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அதன் தாக்கமாக உருவான சுனாமி அலைகள் ஜப்பானின் வடக்கு பகுதியில்...