follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP2குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த தசுன் ஷானக

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த தசுன் ஷானக

Published on

நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸுக்கு பதிலாக இலங்கை அணியின் சகலத்துறை வீரரான தசுன் ஷானக அழைக்கப்பட்டுள்ளார்.

ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தசுன் ஷானகவை 75 லட்சம் இந்திய ரூபாய்க்கு (இலங்கை மதிப்பில் 2.5 கோடி ரூபாய்க்கு மேல்) வாங்கியுள்ளது.

இருப்பினும், டைட்டன்ஸ் அணி ஷானகவுக்குப் புதிய அனுபவம் இல்லை என்பதுடன், அவர் முன்பு 2023ஆம் ஆண்டு அப்போது தலைவராக இருந்த ஹார்திக் பாண்டியாவின் கீழ் அணிக்காக விளையாடினார்.

பின் வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஷானக, மூன்று போட்டிகளில் விளையாடி 26 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இருப்பினும், அவருக்கு அங்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்கவில்லை.

தசுன் ஷானக இலங்கைக்காக 102 டி20 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்கள் உட்பட 1456 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

அவரது ஸ்ட்ரைக் ரேட் 122.46 ஆக பதிவாகியுள்ளது.

அவர் பந்துவீச்சிலும் திறமையைக் காட்டியுள்ளதுடன், இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...

பதில் பாதுகாப்பு அமைச்சர் – துருக்கிய தூதுவர் சந்திப்பு

துருக்கி குடியரசின் தூதுவர், மேதகு செமிஹ் லுட்ஃபு துர்குட், பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை...