follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் - ஜனாதிபதி

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

Published on

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை தாம் மதிப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான அரசியலில் ஈடுபடும் உரிமையை மதிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தலவாக்கலை பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட அனைத்து மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது.

தற்போதைய தலைமுறையினருக்காக மீண்டும் ஒருபோதும் போரை நடத்தாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடுவோம்.

ஒரு நாடு முன்னேறுவதற்கு மிக முக்கியமான விடயம் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதாகும்.”

“ஆனால் எங்களுக்கு நிலையற்ற பொருளாதாரம் இருந்தது. பொருளாதாரம் குறித்து பெரும் சந்தேகம் இருந்தது.

எனினும் எங்கள் நிர்வாகத்தின் போது, ​​நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு இலங்கை மக்கள் ஒன்றுகூடி உற்சாகத்துடன் கொண்டாடிய ஆண்டாகும். மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு பழகி வருவதை நாம் காணலாம்.” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அம்பலங்கொடை பொலிஸாரினால் கைது செய்த இளைஞன் மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

அம்பலங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில்...

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...