follow the truth

follow the truth

July, 31, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசுற்றாடல் அமைச்சிலிருந்து திடீரென காணாமல் போன 96 மில்லியன் ரூபாய்!

சுற்றாடல் அமைச்சிலிருந்து திடீரென காணாமல் போன 96 மில்லியன் ரூபாய்!

Published on

சுற்றாடல் அமைச்சினால் வெளிநாட்டு நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் முடிவில் மீதமாக இருந்த 96 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறு பணம் காணாமல் போனமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றாடல் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

திட்ட செயற்பாடுகளின் பின்னர் எஞ்சிய 96 மில்லியன் ரூபாய் பணம் பிரசாரத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் அவ்வாறான விளம்பரங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக உடனடியாக தகவல் ஆராய்ந்து, விசாரணை நடத்துமாறு திட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

உலகத்தை மாற்றுபவர்கள் பேராசை இல்லாதோர் – லால் காந்தவுக்கு டட்லி செருப்படி

டட்லி சிறிசேன அரலிய அரிசி வணிகத்தின் நிறுவனர் ஆவார். இலங்கை சந்தையில் கல் நீக்கப்பட்ட அரிசியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய...