follow the truth

follow the truth

April, 30, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

Published on

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கோட்டேயில் உள்ள ரெபல் ஹோட்டலில் நேற்று(22) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க,

“யாராவது நகர சபைக்குச் சென்று சிறிய சம்பளம் பெற்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒரு பெரிய வீட்டைக் கட்டி, ஒரு வாகனத்தை வாங்கினால், அவர்கள் அதை எப்படிச் செய்தார்கள் என்று நாங்கள் அவர்களிடம் கேட்போம். அவர்களிடம் அதற்கு பதில் இல்லையென்றால், நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். அந்த சட்டவிரோத சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்போம்.”

எதிர்க்கட்சியினர் எப்போதும் எங்களை விமர்சித்து, குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நாங்கள் மக்களின் பணத்தை திருடவில்லை, பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்கக் கோரி கடிதங்கள் அனுப்பவில்லை, பொலீசாருக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. இவ்வளவு நல்ல அரசியல் கலாசாரத்தை செயற்படுத்துவதன் மூலம் நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம்.

“உங்கள் கிராமத்தை கட்டியெழுப்ப ஊழல் செய்யாத, உங்கள் பணத்தை திருடாத ஒரு குழுவை நியமிக்குமாறு நான் இச்சந்தரப்பத்தில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.”என பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...