சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட இந்த படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம் திகதி மரணம் அடைந்தார்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு எதிர்வரும் 7ம் திகதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் மாநாடு தொடங்க இருக்கிறது.
ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். இந்நிலையில், புதிய போப் தேர்வு குறித்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த அவரது கருத்து கேட்கப்பட்டதற்கு டிரம்ப், “நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என்றார்.
மேலும் போப் பிரான்சிஸுக்குப் பதிலாக யார் இருக்க வேண்டும் என்று கேட்டபோது, பதில் அளித்த டிரம்ப், நியூயார்க் வெளியே இருக்கும் ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார், அவர் மிகவும் நல்லவர், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம் இவ்வாறு அவர் கூறினார்.