தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.