follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP1ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பில் CIDயில் முறைப்பாடு

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பில் CIDயில் முறைப்பாடு

Published on

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட மேற்படி கருத்துக்கள், ஜனாதிபதியின் நற்பெயருக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், துசித ஹல்லொலுவ மற்றும் அந்தக் கருத்துக்களை சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்ப நடவடிக்கை எடுத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் தொடர்பில் துரித விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக அவரின் சட்டத்தரணி அகலங்க உக்வத்தேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவும் இதில் இணைந்து கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள்

நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல்...

வெப்பமான காலநிலை குறித்து முன்னெச்சரிக்கை

கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின்...

ஜனாதிபதி – வியட்நாம் ஜனாதிபதி சந்திப்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இனால் இன்று(05) அமோக...