இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கைப் செயலி 2003 ம் ஆண்டு நிக்லாஸ் ஜென்ஸ்ட்ராம் என்னும் டெவலப்ரால் முதன் முதலில் வெளியிடப்பட்டது. வீடியோ வழி உரையாடல்கள், வீடியோ கான்ஃபரன்சிங், வாய்ஸ் கால்ஸ் போன்ற வசதிகள் இந்த செயலியில் கொண்டு வரப்பட்டது.
மேலும், கூடுதல் வசதிகளாக பயனர்கள் ஸ்கைப் தளத்திலேயே இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன.