2025 ஆம் ஆண்டின் 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது.
அதன்படி, இன்று (06) காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெறும்.
அதன்படி, இத்தேர்தல் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338 ஆகும்,
49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களை சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள நிலையில், இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்படுகிறது.