“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர் சுனில் வடகல பிபிசி சிங்கள சேவையிடம், கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைப் பெறுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் அதிகாரத்தை நிறுவுவதற்கு ஆதரவு பெறுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
“நாங்கள்தான் கொழும்பு மாநகர சபையில் அதிக உறுப்பினர்களைப் பெற்ற குழுவாக இருக்கிறோம். அந்தக் குழுவுக்கு இணையாக வேறு குழு இல்லையே. ஏதேனும் குறை இருந்தால், உறுப்பினர்களாக சிலருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகளாக அல்ல,” எனவும் அவர் கூறினார்.