பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நடைபெற இருந்த போட்டியும், எதிர்வரும் 11ம் திகதி தர்மசாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.