கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் மரணத்துக்கு நீதிகோரி, பம்பலப்பிட்டி பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தினால் டுப்ளிகேஷன் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவு வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.