ஏ.கே.சுபாசினி இந்திகா குமாரி லியனகேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு நியமிப்பதற்காக, பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சி.ஏ. ஜயசுந்தரவின் சேவைக்காலம் கடந்த 6 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், வெற்றிடமாகவுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.