கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் (15) தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கல்வி அமைச்சு, குறித்த மாணவி கல்வி பயின்ற பம்பலப்பிட்டி பிரபல பாடசாலையின் அதிபரிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.
தற்போது குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.