பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது.
இதன் போது கருத்து தெரிவித்த கோபா குழு தலைவர், ரயில்வே திணைக்களத்தின் செயல்திறன் மிகவும் மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
கணக்காய்வாளர் – “கடந்த 5 வருடங்களாக கணக்காய்வு முகாமைத்துவ குழு கூடவில்லை. கணக்காய்வு விசாரணைகளுக்கு முறையாக பதிலளிக்கப்படவில்லை. கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கள் இல்லாததால், இந்தப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து சரிசெய்வதற்கான வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளது.”
ரயில்வே திணைக்கள முகாமையாளர் – இந்த வருடம் இந்த 4 கூட்டங்களையும் நடத்துவதாக நான் உறுதியளிக்கிறேன்.
வருடாந்திர கணக்காய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. இது பாரதூரமான பிரச்சினையாகும். நீங்கள் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையை 2023 இல் சமர்ப்பித்தீர்கள். அத்தோடு ரயில்வே திணைக்களம் 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கைகளையும் 2023இல் சமர்ப்பித்துள்ளது. அவ்வாறு என்றால் கடுமையான நிர்வாக பலவீனமும் திறமையின்மையும் உள்ளது. அரசாங்கத்தைப் பொருட்படுத்தாமல், அரச அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். நடத்தப்பட்ட அமர்வுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், அது மிகவும் மோசமான மட்டத்தில் உள்ளது. 27 கணக்காய்வு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை.
27 கணக்காய்வு கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை. தற்போதைய தலைமை அதிகாரி அதற்கு பதிலளிக்க முடியுமா?
“பதில்களை வழங்குவதில் சிறிது தாமதம் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். 9 திணைக்களங்கள் உள்ளதன் காரணமாக அனைத்தையும் ஒன்றாக இணைந்து பதில் வழங்கும் போதே இவ்வாறு சிறிது தாமதம் ஏற்படுகிறது.”