follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

Published on

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் நாளை (15) ஏளமிடப்படவுள்ளன.

விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் பத்து வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன் அதற்கமைவான விலைக் கோரல் இன்று (14) ஆம் திகதி முடிவுற்றது.

நாளை தினம், பீ.எம்.டபிள்யூ.மோட்டார் வாகனம் 01, போர்ட் எவரெஸ்ட் ஜீப் 01, ஹுண்டாயி டெரகன் ஜீப் 01, லேண்ட் ரோவர் ஜீப் 01, மிட்சுபிஷி மொண்டெரோ ஜீப் 01, நிசான் பெற்றல் ஜீப் 03, நிசான் வகை மோட்டார் கார்கள் 02, போர்ஷ் (Porsche) கெயின் மோட்டார் வாகனம் 01, சென்யோன் ரெக்ஸ்டன் வகை ஜீப் 05, லேண்ட் குரூஷர் சஹரா வகை ஜீப் 01, வீ 08 வாகனங்கள் 06 மற்றும் மிட்சுபிஷி ரோசா வகை குளிரூட்டப்பட்ட பஸ் ஒன்றும் ஏளமிடப்படவுள்ளன.

ஜனாதிபதி அலுவலகத்தின் அதி சொகுசு வாகன ஏளத்தின் முதல் கட்டத்தின் கீழ் இதற்கு முன்னதாக 14 சொகுசு வாகனங்கள், பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 06 வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கு அமைவான ஏளம் நடத்தப்பட்டது.

அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானித்திருப்பதோடு, முன்னைய ஏளத்தில் 09 டிபெண்டர்கள் உள்ளடங்களாக பல்வேறு வகையான 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் நிரந்தர பணிக்குழுவினருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதோடு, முன்னாள் ஜனாதிபதியால் தனது பதவிக் காலத்தில் அரசியலமைப்பின் 41 (1) உறுப்புரைக்கு அமைவாக பணியமர்த்தப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் பணிக் குழாமிற்காக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...