மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“உப்பு பக்கட் 60 ரூபாவாக உயர்வதற்கு 76 வருடங்கள் சென்ற போதும் மறுமலர்ச்சி ஆட்சியில் 7 மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளது.
உப்பு தட்டுப்பாட்டிற்கு முன்னைய அரசை குறை கூறும் நளீன் ஹேவகே அவரது மனைவி கர்ப்பம் தரித்தால் அதையும் முன்னைய அரசாங்கத்தின் தலையில் போட வாய்ப்புள்ளது.
சுனில் ஹந்துன்னெத்தி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்து வைத்ததாக கூறிய உப்பு தொழிற்சாலைக்கு என்ன ஆனது மூடிவிட்டார்களா? இந்த அரசு பேச்சு மட்டும் தான் செயலில் இல்லை..” எனத் தெரிவித்திருந்தார்.