துருக்கியில் நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி அவரை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க பட்டியலிடப்பட்ட பெயர்களில் ரஷ்ய ஜனாதிபதி புதின் இல்லை என்று கிரெம்ளின் அறிவித்தது.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் கலந்து கொள்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது கத்தாரில் இருக்கும் அவர், ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை என்றால், தானும் கலந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்ய மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகள் டிசம்பர் 2019 முதல் நேரில் சந்தித்ததில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான கடைசி நேரடிப் பேச்சுவார்த்தை மார்ச் 2022 இல் இஸ்தான்புல்லில் நடைபெற்றது.