ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலத்தில் விடப்பட்டன.
இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஏலமிடப்பட்ட 26 வாகனங்களில், 17 வாகனங்கள் இன்று விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் அனைத்தும் 10 வருட காலத்திற்குள் தயாரிக்கப்பட்டவையாகும்.
அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானித்திருப்பதோடு, முன்னைய ஏலத்தில் 09 டிபெண்டர்கள் உள்ளடங்களாக பல்வேறு வகையான 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
BMW கார், Ford Everest 2, Hyundai Terracan வாகனம், Land Rover Discovery வாகனம் 2, Mitsubishi Montero வாகனம், Nissan பெற்றோல் ரக வாகனம் 03, Nissan ரக கார் 2, Porsche Cayenne கார், SsangYong Rexton ரக ஜீப் வாகனம் 5, Land Cruiser Sahara ரக வாகனம், V8 வாகனம் 6 மற்றும் Mitsubishi Rosa சொகுசுப் பேருந்து ஆகியவை இன்று ஏலத்தில் விடப்பட்டன.
இந்த வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 108 தொழிலதிபர்கள் வருகைதந்ததால் வாகனங்களுக்கான கேள்வியும் அதிகரித்திருந்தது.
இன்று நடைபெற்ற வாகன ஏலத்தின் ஊடாக அரசுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.