follow the truth

follow the truth

May, 16, 2025
Homeவணிகம்HP மடிகணனிகளுக்கு 3 வருட பிரத்தியேக உத்தரவாதம்

HP மடிகணனிகளுக்கு 3 வருட பிரத்தியேக உத்தரவாதம்

Published on

Intel மற்றும் AMD புரொசசர்களுடன் கூடிய தெரிவு செய்யப்பட்ட HP மடிகணனிகளுக்காக மூன்று வருடத்திற்கான விசேட உத்தரவாதத்தினை HP இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ விற்பனையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்தவன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.

காரணம், இது தயாரிப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் முக்கிய நன்மைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. இதன் மூலம் HP மடிகணனியில் முதலீடு செய்வது நிதி ரீதியாக மிக சிறப்பு வாய்ந்ததாகவும் பாதுகாப்பு வாய்ந்த ஒன்றாகவும் மாற்றுகிறது.

இந்த விசேட உத்தரவாதம் மூலம், உரிய அசல் உதிரிப்பாகங்கள், அசல் விண்டோஸ் இயங்குதளம் மற்றும் சான்றளிக்கப்பட்ட சேவை, பொறியாளர்களின் தொழில்முறை தொழில்நுட்ப உதவிகளை அடையலாம். இதன் மூலம், உத்தியோகபூர்வமற்ற இடங்களில் கொள்வனவு செய்யப்படுவதனால் பெரும்பாலான வேளைகளில் அதிலுள்ள தரமற்ற பாகங்கள் காரணமாக நிகழும் நீண்டகால சேதங்களிலிருந்து உங்கள் சாதனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இச்சிறப்பு உத்தரவாதம், Intel Core i3, Core i5, Ryzen 3, Ryzen 5 புரொசஸர்களைக் கொண்ட HP மடிகணனிகளுக்கு பொருந்தும்.

உயர்மட்ட செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை இது உறுதி செய்கிறது. இதற்கு தகுதியான மாதிரிகளாக HP Laptop 15-fd0501TU, HP Laptop 15-fc0387AU, HP Laptop 15-fd1227TU ஆகியன உள்ளடங்குகின்றன.

இம்மாதிரிகள் அழகியல், உறுதிப்பாடு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கின்றன. வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை இலங்கையில் உள்ள HP இன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் பெற முடியும். அத்துடன் அபான்ஸ் (Abans), சிங்ஹகிரி (Singhagiri) உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள ஏனைய உத்தியோகபூர்வ விற்பனையாளர்கள் மூலமும் இந்த உத்தரவாதத்தைப் பெறலாம்.

இது குறித்து, HP இன் இலங்கை மற்றும் பங்களாதேஷ் வணிக அபிவிருத்தி சிரேஷ்ட பணிப்பாளர் அங்குர் கோயல் தெரிவிக்கையில், “ஒரு உத்தியோகபூர்வ விற்பனையாளரை தெரிவு செய்வது, உங்கள் சாதனத்தின் தரம், நம்பகத்தன்மை, நீடித்த பயன்பாட்டை உறுதி செய்வதற்கான முதலாவது படியாகும். எமது மூன்று வருட விசேட உத்தரவாதமானது, இந்த அர்ப்பணிப்பின் ஒரு பிரதிபலிப்பாகும். இது வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியையும் HP இன் அசல் தயாரிப்புகளும் அதன் சான்றளிக்கப்பட்ட சேவை மூலம் வழங்கப்படும் விசேட ஆதரவையும் உறுதி செய்கிறது” என்றார்.

HP இன் அங்கீகாரம் பெற்ற கூட்டாளர்களான Abans மற்றும் Singhagiri ஆகியன மாணவர்களும் இளம் தொழில்முனைவோர்களும் அசல் HP மடிகணனிகளை எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில், வசதியான கொடுப்பனவு வசதிகளை வழங்குகின்றன. Abans காட்சியறைகள் மூலம் கடனட்டை இன்றி, மாதாந்த தவணைக் கட்டணமாக ரூ. 7,400 முதல் 24 மாத தவணை திட்டங்களை தெரிவு செய்யலம். தெரிவு செய்யப்பட்ட வங்கிகளின் கடனட்டைகளுக்கு 60 மாதங்கள் வரை 0% வட்டி, அத்துடன் இலவசமாக earbuds மற்றும் headphones ஆகியனவும் வழங்கப்படும்.

HP இன் அங்கீகாரம் பெற்ற கூட்டாளர்களான Abans மற்றும் Singhagiri ஆகியன மாணவர்களும் இளம் தொழில்முனைவோர்களும் அசல் HP மடிகணனிகளை எளிதாக பெற்றுக் கொள்ளும் வகையில், வசதியான கொடுப்பனவு வசதிகளை வழங்குகின்றன.

Abans காட்சியறைகள் மூலம் கடனட்டை இன்றி, மாதாந்த தவணைக் கட்டணமாக ரூ. 7,400 முதல் 24 மாத தவணை திட்டங்களை தெரிவு செய்யலம். தெரிவு செய்யப்பட்ட வங்கிகளின் கடனட்டைகளுக்கு 60 மாதங்கள் வரை 0% வட்டி, அத்துடன் இலவசமாக earbuds மற்றும் headphones ஆகியனவும் வழங்கப்படும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

23ஆவது DSI சுப்பர் ஸ்போர்ட் பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட DSI

இலங்கையின் முன்னணி காலணி வர்த்தகநாமமான DSI, 23ஆவது ஆண்டாக நடைபெறும் DSI Supersport பாடசாலை கரப்பந்து சம்பியன்ஷிப் தொடரை...

தங்கத்தின் விலை சடுதியாக குறைவு

நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 6,000 ரூபாய் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (14) காலை கொழும்பு...

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக...