தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று மீண்டும் ஜனாதியாக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்க்கட்சியினருக்கு கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஆதரவு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையே, எதிர்வரும் 25-ம் திகதி அங்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
இதுதொடர்பாக கொலம்பியா, மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த 17 பேர் உட்பட சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலா அரசாங்கம் தடை விதித்துள்ளது. தேர்தல் முடியும் வரை இந்தத் தடை நீடிக்கும் என வெனிசுலா உள்துறை மந்திரி டியோஸ்டாடோ கபெல்லோ தெரிவித்துள்ளார்.