உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு பிரதிநிதிகளை நியமிக்கும்போது, அவர்கள் பெற்ற வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
அதிக சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் மட்டுமே அந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்படவும் தகுதி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.