பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை இன்று (23) காலை, கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர் கையளித்துள்ளார்.