எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்
அதற்கேற்ப தாம் உட்பட அமைச்சர்களின் பொறுப்புகளை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒருவேளை அங்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.