மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்று (23) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பசில் ராஜபக்ஷ உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டில் இருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச, சம்பந்தப்பட்ட வழக்கை நவம்பர் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டார்.