கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது.
இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில பகுதிகளுக்கு மா மற்றும் பிற உதவிகள் சென்றடைய ஆரம்பமானது.
ஆனால் 11 வார நெருக்கடியால் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை என்று பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்குள்ள பேக்கரிகளில் தயார் செய்யப்படும் ரொட்டிகளை பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
இஸ்ரேல் காசாவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகள் செல்ல அனுமதித்த நிலையில் உதவிகளை ஏற்றிய சுமார் 90 லொறிகள் காசாவை அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மருந்துகள், கோதுமை மா மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை சுமந்த லொறிகள் காசாவுக்குள் நுழைந்ததாக ஐ.நா. மனிதாபிமான நிறுவனத்தின் பேச்சாளர் ஜேன்ஸ் லேர்க் குறிப்பிட்டுள்ளார்.
‘போர் நிறுத்த காலத்தில் நாளாந்தம் 600 லொறிகள் வந்தன, அதன்படி தற்போதைய அளவு கடலில் ஒரு துளியைத் தவிர ஒன்றுமில்லை’ என்றும் பலஸ்தீன அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் பணிப்பாளரான அம்ஜாத் ஷவா குறிப்பிட்டுள்ளார்.