ஹார்வர்ட் பல்கலைகழகம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் நடவடிக்கையை டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைகழகம் வழக்கு தொடர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாஸ்டனில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அரசாங்கத்தின் நடவடிக்கை “தெளிவான சட்ட மீறல்” என அந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையை “சட்டவிரோதமானது” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுகள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களைப் பாதிக்கக்கூடும்.
கடந்த கல்வியாண்டில் 6,700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக சேர்ந்துள்ளனர் என்பதை பல்கலைக்கழக தரவுகள் காட்டுகின்றன. இது ஹார்வார்டின் மாணவர் சேர்க்கையில் 27% ஆகும்.