follow the truth

follow the truth

August, 22, 2025
HomeTOP1“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக - “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை...

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக – “வரி சக்தி” வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படை மேம்பாட்டிற்கான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

Published on

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மேலும், எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது அரச அதிகாரியோ இவ்வாறான செயலில் ஈடுபட்டால், தரம் பாராமல் அதிகபட்ச தண்டனை வழங்க தலையிடுவேன் எனவும் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் செலுத்தும் வரிகளுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கு எதிராக செயல்படும் கருப்புப் பொறிமுறையை முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வரி இணக்கம் மற்றும் வரி அடிப்படையை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டமான “வரி சக்தி” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்

“உங்கள் வரிப் பணம் உங்களுக்காக“ – என்ற தொனிப்பொருளின் கீழ் “வரி சக்தி – தேசிய வரி வாரம்” ஆரம்பித்தல் இதற்கு இணைந்தவகையில் நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கம் ஸ்தம்பிதமடைந்த ஒரு நாட்டைக் பொறுப்பேற்றதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வரி பொறிமுறையை நெறிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

ஒரு நாடாக நாம் தகுதிகாண் காலத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் உடன்படிக்கையை இந்நாட்டின் அவ்வாறான இறுதி வேலைத்திட்டமாக மாற்றுவதன் மூலம் நமக்கே உரிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சகல மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

வரி செலுத்துவதில் மக்களின் அவநம்பிக்கையான மனப்பான்மையை நம்பிக்கையான மனப்பான்மையாக மாற்றவும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்ற புதிய வரிக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வரி சக்தி தேசிய வரி வாரம் செயல்படுத்தப்படுகிறது.

இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரையான வாரத்தில், வரி செலுத்துதல் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வரிப்பணம் எவ்வாறு பங்களிக்கிறது என்பதுடன் மக்களுக்கான நன்மைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

2024 ஆம் ஆண்டிற்கான தனிநபர் வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையத் தளத்தின் திறப்பு விழாவும் இங்கு நடைபெற்றதுடன், 2024/25 மதிப்பீட்டு ஆண்டிற்கான முதல் வரி வருமானமாக ஜனாதிபதி, தனது தனிநபர் வருமான வரி அறிக்கையை இணையத் தளத்தில் பதிவேற்றார்.

மேலும், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ASYHUB முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெர்மன் அரசு மற்றும் UNCTAD ஆகியவற்றின் ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பின் மூலம், இறக்குமதியாளர்களுக்கு பொருட்கள் நாட்டிற்கு வருவதற்கு முன்பு வரி செயற்பாடுகளை முடிக்க வாய்ப்பு வழங்கப்படுவதுடன், அதன் மூலமாக, சுங்கத்தால் செயல்படுத்தப்படும் அபாயங்கள் முகாமைத்துவம் மென்பொருள் மூலமாகவும், அபாயங்கள் அற்ற கொள்கலனை கப்பலில் இருந்து நேரடியாக சம்பந்தப்பட்ட இறக்குமதியாளர்களின் களஞ்சியசாலைகளுக்கு கொண்டு செல்ல வசதிகளை ஏற்படுத்தும்.
சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்படும் மதுபான போத்தல்களை பாதுகாப்பு அடையாள முறையின் ஊடாக அடையாளம் காணும் தொலைபேசி செயலியை மதுவரி அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...