இணை சுகாதாரப் பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை(05) வேலைநிறுத்தப் போராட்டத்தைத் ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நிறைவுகாண் வைத்திய சேவையின் பதவி உயர்வுகள் தொடர்பாக வாக்குறுதியளிக்கப்பட்ட தீர்வுகளை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.