இஸ்ரேல் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அங்கிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கும் அதிகாரிகள் தெஹ்ரானில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வேறு ஒரு இடத்திலிருந்து அதன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் முன்னர் வழங்கப்பட்ட எண்கள் மூலம் அனைத்து தொடர்புகளையும் மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.