ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், இன்று(18) ஒரே நாளில் தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தில்லியிலிருந்து இன்று (ஜூன் 18) டொராண்டோ செல்ல தயாரான ஏஐ 188 விமானம், பராமரிப்பு பணிகளின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.