follow the truth

follow the truth

June, 20, 2025
HomeTOP1ஹர்ஷன சூரியப்பெரும பா.உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

ஹர்ஷன சூரியப்பெரும பா.உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

Published on

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்திருப்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சருமான ஹர்ஷன சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யும் கடிதத்தை தம்மிடம் கையளித்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

(கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும அவர்களின் கடிதத்திற்கு அமைய குறித்த பதவி விலகல் 2025 ஜூன் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதற்கு அமைய, 10வது பாராளுமன்றத்தில் (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும அவர்களின் ஆசனத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக 1981ஆம் ஆண்டு ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64 (5)ஆம் பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

காட்டு யானைப் பிரச்சினையைத் தீர்க்க பொறுப்புள்ள அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் நியமிக்கப்படும்

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...