கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் லாரி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் தொலைபேசி கம்பம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சம்பந்தப்பட்ட தொலைபேசி கம்பத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.