தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தெரிவு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை, பனைவூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று(04) தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், திருச்சி அல்லது மதுரையில் 2ஆவது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.