தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மீண்டும் ஒரு முறை அரசியல் மேடையில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கும், சமீபத்தில் யாங்கி-சியோன் கூட்டணியால் தாக்கப்பட்ட ஈரானுக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் இசைபாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘யாருடைய தோட்டாக்கள் இவை?’ [“කාගෙද මේ මූණිස්සම්?” | Kageda Me Munissam] என்ற தலைப்பிலான பாடல் பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடலின் மூலம், விமல் வீரவன்ச மனிதாபிமானத்தை முன்னிறுத்தும், ஒரு தனித்துவமான அரசியல் கருத்தை முன்வைத்துள்ளார்.