விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட நால்வரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மூன்று சந்தேக நபர்களை தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், ஒரு சந்தேக நபரை 500,000 ரூபாய் சரீரப் பிணையிலும் விடுவிக்க தலைமை நீதவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதவான், அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.
பின்னர் வழக்கை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.