தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் CID-யில் முன்னிலையாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொள்கலன்கள் தொடர்பான சுங்க மோசடி சம்பவம் அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக தரப்பினரிடம் விளக்கம் கோரப்பட்டு வருகிறது.
விமல் வீரவன்ச தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.