திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி, புல்மோட்டை பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (08) முறைப்பாடு செய்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்காத காரணத்தால் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மற்றும் சில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தனக்கு சமூக வலைத்தளம் ஊடாகவும் ஏனைய வழிகளிலும் உயிர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
எனவே, அவர்களுக்கு எதிராக நேற்று (08) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தனது முறைபாட்டை பதிவு செய்துள்ளாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்