follow the truth

follow the truth

July, 31, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

Published on

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அமைச்சர் தமிழ் மொழியில் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

‘எனது தாய் மொழி தமிழ். அந்த மொழியிலேயே நான் பதிலளித்தேன். கேட்கப்பட்ட கேள்விக்கு – தெளிவாக விளக்கமளித்தேன். ஆனால் எதிரணியில் உள்ளவர்கள் தமிழ் மொழியை பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். தமிழ் மொழியை கொச்சப்படுத்துகின்றவர்களாக மாறியுள்ளனர்.

நானும் இந்த நாடாளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒருவரின் சிரிப்பு மற்றும் நக்கலை பார்க்கும்போது அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பது தெரியும்.

தமிழ் மொழியில் பதிலளிக்கும்போது அந்த மொழியை கொச்சைப்படுத்தும் எதிரணி இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.” – என்றார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் – கோட்டாபய

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன்...

உலகத்தை மாற்றுபவர்கள் பேராசை இல்லாதோர் – லால் காந்தவுக்கு டட்லி செருப்படி

டட்லி சிறிசேன அரலிய அரிசி வணிகத்தின் நிறுவனர் ஆவார். இலங்கை சந்தையில் கல் நீக்கப்பட்ட அரிசியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய...

“மன்னிக்க வேண்டுகிறேன்!” ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...