ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று(09) திறந்து வைக்கப்பட்டது.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 கங்கேவத்த தமிழ் வித்தியாலயம் 320 மாணவர்கள் மற்றும் 17 ஆசிரியர்களுடன் தமது கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற இவ்வேளையில், தரம் 6 மாணவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறை நிலவி வந்தது.
பாடசாலை பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பல இலட்சம் ரூபா நிதி பங்களிப்பினூடாக மீள் புனரமைப்பு செய்யப்பட் வகுப்பறையானது இன்று(09) உத்தியோகப்பூர்வமாக திறந்துவைக்கப்படது.
குறித்த நிகழ்வானது பாடசாலை அதிபர் ளு.சுகீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றதுடன், மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ளு.யு.ளு.புஸ்பகுமார பிரதம அதிதியாக கலந்துக் கொண்டிருந்தார். மேலும் குருனாகலை பகுதியில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றும் நலன் விரும்பி ஒருவரும் இந்த கட்டிடத்திற்கு பங்களிப்பு செய்துள்ள நிலையில் அவரும் அவரின் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டிருந்தனர். மேலும் பிரவுன்லோ 320N கிராம உத்தியோகத்தர் பிரிவு பொலிஸ் கமிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள், தோட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட நலன் விரும்பிகளின் மூலமாக திறந்து வைக்கப்பட்து.
இப்பாடசாலை வகுப்பறையை புணர்நிர்மானம் செய்வதற்காக உதவிய அனைத்து உறவுகளுக்கும் எனது நன்றிகள்.