follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP1ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீசும்போது கவனம் தேவை

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீசும்போது கவனம் தேவை

Published on

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் வீசுவதைத் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்கள்.

பழங்களின் தோல்களில் நீர் தேங்கும்போது, டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு சாதகமான சூழல் உருவாகும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் பழங்களின் தோல்கள் டெங்கு நோய்க்கான நுளம்புகள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடும் என பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இத்துடன், பலர் இந்த பழங்களின் தோல்களை வீதியோரங்களிலும், வீடுகளின் வெவ்வேறு இடங்களிலும் வீசுவதால், அவை, டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதால், குறித்த பழங்களின் தோல்களை அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு வைத்தியர் தீபால் பெரேரா வேண்டுகோள் வைத்துள்ளார்.

டெங்கு நுளம்புகள், இனப்பெருக்கம் செய்ய மங்குஸ்தான், ரம்புட்டான் ஆகியவற்றின் பழத்தோல்கள் போன்ற குறைந்த அளவிலான நீர்தேங்கும் இடம் போதுமானது என்பதால், அவை டெங்கு நுளம்புகள் பெருக உகந்த இடமாக அமையும் என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீரிகமவில் துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மீரிகம, 20ஆம் ஏக்கர் பகுதியில் உள்ள துரியன் தோட்டமொன்றில் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் மீது தோட்டத்தின் காவலாளி...

இலங்கை – ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவு

இலங்கை - ஈரான் பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில்...

DMT முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு அனுமதி அளித்த சம்பவம்...