சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 110 கோடி ரூபாய் பெறுமதியான 35 கிலோ கிராம் தங்கத்துடன் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32 வயதான குறித்த சந்தேக நபர் டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து 195 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 13 கிலோ நகைகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.